விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
பாவூர்சத்திரம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.;
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள சடையப்பபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்தையா மகன் சிவன் (வயது 20). பிளஸ்-2 வகுப்பு வரை படித்துள்ளார். விடுமுறை நாட்களில் சிவன் கட்டிட வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், நோய் குணமாகாததால் மனம் உடைந்து காணப்பட்ட சிவன், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக வயலுக்கு தெளிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு சிவன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.