விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்

Update: 2023-05-01 20:53 GMT

பேரையூர்,

பாப்பையாபுரத்தை சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவருடைய மகன் ஜெயவீரன் (வயது 23). இவர் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். ராணுவம் மற்றும் போலீஸ் வேலைக்கு வேலை தேடி உள்ளார். வேலை கிடைக்காத மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். வயது அதிகமாகி விட்டால் வேலை கிடைக்காது என்று விரக்தியில் இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெயவீரன் வீட்டில் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். .இது குறித்து பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்