விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

உளுந்தூர்பேட்டை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி;

Update: 2023-01-13 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆரியநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சன்னியாசி மகன் மருதமலை(வயது 24). இவருக்கும் அவரது மனைவி சவுந்தர்யா என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினையால் சண்டை இருந்து வந்தது. இதையடுத்து கணவரை கோபித்துக்கொண்ட சவுந்தர்யா அவரது தாய் வீ்ட்டுக்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து விஷம் குடித்து மயங்கி விழுந்த மருதமலையை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திாியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்