விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்;

Update: 2023-08-11 18:45 GMT

காரியாபட்டி

திருச்சுழி அருகே கீழகண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ் (வயது 30). டிராக்டர் வைத்து தொழில் செய்துவந்துள்ளார். இந்நிலையில் ராஜேஸ் தனது பெற்றோரிடம் லாரி வாங்கி தருமாறு கேட்டுள்ளார். இதற்கு ராஜேஸின் பெற்றோர் தற்போது லாரி வாங்க பணம் இல்லை. பணம் வந்தவுடன் லாரி வாங்கி தருவதாக கூறியுள்ளனர். ஆனால் லாரி வாங்கி தராததால் ராஜேஸ் கோபத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜேஸ் வீட்டின் மாடியில் விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவரை மீட்டு அருப்புக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராஜேஸ் உயிரிழந்தார். இது குறித்து திருச்சுழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்