செயின் பறித்த வழக்கில் வாலிபர் கைது

வாலாஜா அருகே நடந்த செயின் பறிப்பு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-06-27 18:31 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த குடிமல்லூர் காலனியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி ரங்கநாயகி (வயது 50). இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வாலாஜா அணைக்கட்டு ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர், ரங்கநாயகி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து சென்று விட்டார். இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் சமீபத்தில் வாணியம்பாடி பாரத்நகரை சேர்ந்த பீர் முகமது மகன் முகமது சதாம் (22) என்ற வாலிபர் திருட்டு வழக்கு ஒன்றில் சிக்கினார். விசாரணையில் வாலாஜா பகுதியில் ரங்கநாயகியிடம் செயினை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டார். அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து செயினை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்