வீட்டில் கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது

வீட்டில் கஞ்சா பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-09-16 22:15 GMT

திண்டுக்கல் குமரன்திருநகர் பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக, வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அதில் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 33) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்