புகையிலை கடத்திய வாலிபர் கைது

ஆலங்குளம் அருகே புகையிலை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-07 19:00 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் - துத்திகுளம் சாலையில் குருவன்கோட்டை விலக்கு அருகே ஆலங்குளம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை மறித்து சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது.

உடனே லோடு ஆட்டோவை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், குறிப்பன்குளத்தை சேர்ந்த ராமசாமி மகன் ஹரிபாலசுப்பிரமணியம் (வயது 33) என்பதும், புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடத்திச் சென்றது தெரிய வந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஆட்டோ, செல்போன் மற்றும் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்