மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் மற்றும் போலீசார், வெள்ளாங்குழி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வெள்ளாங்குழியைச் சேர்ந்த முத்துகுமார் என்ற அஜித்குமார் (வயது 23) என்பவரை வழிமறித்து சோதனை செய்தனர். இதில் அவர் விற்பனைக்காக 1 கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. எனவே அதனை போலீசார் பறிமுதல் செய்து, முத்துகுமாரை கைது செய்தனர்.