ரெயிலில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

ரெயிலில் கஞ்சா கடத்திய கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-22 16:58 GMT

வடமாநிலங்களில் இருந்து வரும் ரெயில்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்துவதாக வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ஒடிசாவில் இருந்து வந்த கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை செய்தனர். அப்போது அந்த ரெயில் பெட்டியில் இருந்து பையுடன் இறங்கி வந்த வாலிபரை பிடித்து சோதனை செய்ததில் 3 பண்டல்களில் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 32) என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும், வேறு ஒரு ரெயிலில் கஞ்சாவை கேரளாவுக்கு கடத்தி செல்ல காட்பாடியில் இறங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செயதனர்.

Tags:    

மேலும் செய்திகள்