காரில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
மன்னார்குடியில் காரில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது;
மன்னார்குடி:
மன்னார்குடியை அடுத்துள்ள மேலநாகை அருகே நேற்று முன்தினம் இரவு மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ் கண்ணா தலைமையில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மன்னார்குடியில் இருந்து உள்ளிக்கோட்டை சென்று கொண்டிருந்த காரை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரின் பின்பக்கம் சுமார் 1 கிலோ 200 கிராம் அளவிற்கு கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட மன்னார்குடி திருமஞ்சன வீதி பகுதியை சேர்ந்த திலீப் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.