கரூர் பசுபதிபாளையத்தை சேர்ந்தவன் தமிழரசன் (வயது 26). இவர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் தமிழரசனிடம் கஞ்சாவை விற்க முயன்றுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் அந்த மர்மநபர் தமிழரசனை கத்தியை காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து தமிழரசன் கொடுத்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தினார். விசாரணையில், கஞ்சாவை விற்க முயன்றது நரிக்கட்டியூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து சந்தோஷ்குமாரை கஞ்சா விற்றதாக போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா, அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.