கஞ்சா விற்ற வாலிபர் கைது

தேனியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-15 18:45 GMT

தேனி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் தேனி கருவேல்நாயக்கன்பட்டி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது தேவர் சிலை அருகில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் குள்ளப்புரத்தை சேர்ந்த பாண்டி மகன் விஸ்வநாதன் (வயது 28) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 4 கிலோ 500 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்