கஞ்சா விற்ற வாலிபர் கைது

மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-12-16 18:45 GMT


மயிலாடுதுறை திருவிழந்தூர் தீபாய்ந்த அம்மன் கோவில் அருகில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மயிலாடுதுறை கூறைநாடு குமரக்கட்டளைத்தெருவை சேர்ந்த அஜீத் (வயது 25) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜீத்தை கைது செய்து அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்