கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டாா்.;

Update: 2022-09-15 18:55 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் வழுதரெட்டி அஜீஸ்நகர் பகுதியில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் நின்றுகொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அந்த பையினுள் 60 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர், விழுப்புரம் வழுதரெட்டி காமன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர் மகன் மோகன்ராஜ் (வயது 19) என்பதும், இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மோகன்ராஜை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்