கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-09-09 14:48 GMT

வடமதுரையை அடுத்த செங்குறிச்சி கம்பளியம்பட்டி பகுதியில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கூத்தம்பட்டிகுளம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர், கம்பிளியம்பட்டியை சேர்ந்த விவேக்குமார் (வயது 30) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 790 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்