தக்கலை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
தக்கலை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
தக்கலை.
தக்கலை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கைது
தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தக்கலை அருகே உள்ள சாஸ்தா மங்கலம் பகுதியில் நேற்று மாலை ரோந்து சென்றார். அப்போது அப்பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படி நின்றார்.
அவரை பிடித்து விசாரித்தபோது கிருஷ்ணமங்கலம் பகுதியை சேர்ந்த நிதிஷ் (வயது 21) என்றும், கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து நிதிசை கைது செய்து, 800 கிராம் கஞ்சா பெட்டலங்களை பறிமுதல் செய்தார்.