டாஸ்மாக் கடை முன்பு போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

டாஸ்மாக் கடை முன்பு போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

Update: 2023-03-13 18:45 GMT

கோவை

கோவை போத்தனூர் அருகே உள்ள கோணவாய்க்கால் பாளையம் டாஸ்மாக் கடை முன்பு வாலிபர் ஒருவர் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றுபார்த்த போது அங்கு, சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவரை சோதனையிட்டனர்.

அப்போது அவரிடம் 88 போதை மாத்திரைகள் இருந்ததை பறிமுதல் செய்தனர். தீவிர விசாரணையில் அவர் வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்த சுசீந்திரன் (22) என்பது தெரியவந்தது. போதை மாத்திரை விற்பனையில் இவருடன் சேர்ந்து யார்? யார்? சம்மந்தப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதான சுசீந்திரன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்