கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

அரக்கோணத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-07-16 18:56 GMT

அரக்கோணம்-திருவள்ளூர் ரோடு, காலிவாரி கண்டிகை, ஷா நகர் ஆகிய பகுதிகளில் அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஷா நகர் சுடுகாடு அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த மோசஸ் (வயது 24) என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடம் இருந்து 1,300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்