கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-26 18:45 GMT

புதுச்சேரி மாநிலம் சாரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் நரேஷ் (வயது 25). இவர் மீது விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 28.9.2022 அன்று பட்டானூர் திருநகர் பகுதியில் கோபாலகிருஷ்ணனின் மகன் அன்பழகன் என்பவரை கொலை செய்ய முயன்றதாக நரேசை ஆரோவில் போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். அதன்பேரில் நரேசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.

இதையடுத்து நரேசை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.



Tags:    

மேலும் செய்திகள்