தாய், மகளை தாக்கிய வாலிபர் கைது
தாய், மகளை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஹெல்த் காலனி பகுதியை சேர்ந்தவர் சிவகாமி (வயது 33). இவருடைய தாயார் நாகலட்சுமி (54). இவர்களின் வீட்டுக்கு கீழப்பஞ்சப்பூரை சேர்ந்த தர்மராஜ் (36) என்பவர் மதுபோதையில் வந்து நாகலட்சுமியிடம் தகராறு செய்ததுடன், தாய், மகள் இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி, மரக்கட்டையால் தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தர்மராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.