தாய்-மகள் உள்பட 3 ேபரை தாக்கிய வாலிபர் கைது
தாய்-மகள் உள்பட 3 ேபரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தை சேர்ந்த தர்மனின் மனைவி கரும்பாயி(வயது 70). இவரும், இவரது மகள் பாலரசி மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியனின் மனைவி அமுதா ஆகியோர் அப்பகுதியில் உள்ள முந்திரி காட்டிற்கு விறகு ேசகரிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த கண்ணன் என்பவரின் மகன் கார்த்திக் (32), இங்கு விறகு சேகரிக்கக்கூடாது என்று தெரிவித்து, 3 பேரையும் சாதி பெயரைக்கூறி தகாத வார்த்தைகளால் திட்டி, அவர்கள் சேகரித்து வைத்திருந்த கட்டையால் அவர்களை தாக்கியுள்ளார். இது குறித்து கரும்பாயி கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த திருமானூர் போலீசார், கார்த்திக்கை கைது செய்து, அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.