வாலிபர் தற்கொலை

Update: 2023-04-28 18:45 GMT

போடி சுப்பிரமணியர் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் குபேந்திரன் (வயது 23). இவரது பெற்றோர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டனர். குபேந்திரனின் தம்பி லோகேஸ்வரனும் மதுரையில் தங்கி படித்து வருகிறார். இதனால் தனியாக வசித்து வந்த குபேந்திரன் உறவினர்கள் யாரும் இல்லாமல் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்