வாலிபர் தற்கொலை

தூக்க மாத்திரையை அதிகமாக சாப்பிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-09 00:58 GMT

திருப்பரங்குன்றம், 

திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 38). இவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் விரக்தியுடன்இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அவர் தூக்க மாத்திரையை அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் காளிதாசை மீட்டு சிகிச்சைக்காக திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்