இளம்பெண் `திடீர்' சாவு

இளம்பெண் திடீரென உயிரிழந்தார்.;

Update: 2022-09-05 17:58 GMT

பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம், வடக்கு தெரு, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அன்பழகன். இவரது 2-வது மகள் ரேணுகா(வயது 20). பிளஸ்-2 வரை படித்துள்ளார். வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் ரேணுகா நேற்று முன்தினம் காலை அதே பகுதியில் உள்ள தனது வயலில் சோளம் பயிரிடுவதற்காக குடும்பத்தினருக்கு உதவியாக உர மூட்டைகளை பிரித்து, உரத்தை எடுத்து கொடுத்துள்ளார். அப்போது 2 உர மூட்டைகளில், ஒரு மூட்டை உரத்தை எடுத்து கொடுத்த ரேணுகா மற்றொரு உர மூட்டையை பிரிக்கலாம் என்று வரும்போது திடீரென்று வாயில் நுரை தள்ளியவாறு மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் ரேணுகாவை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுவாச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரேணுகா நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரேணுகாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதன் அறிக்கை வந்த பிறகு தான் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்