தீராத வயிற்று வலியால் இளம்பெண் சாவு
தீராத வயிற்று வலியால் இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கீழநத்தம் காலனியை சேர்ந்தவர் குணா, கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஜெனிபர் (வயது 21). இவருக்கு சர்க்கரை நோய் மற்றும் தீராத வயிற்று வலி இருந்துள்ளது. இதற்காக அவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ஜெனிபர் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.