இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை; கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

சங்கரன்கோவில் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்த கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

Update: 2023-06-25 19:50 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்த கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இளம்பெண் தற்கொலை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே செந்தட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாஸ்தா (வயது 32). விவசாயி. இவருடைய மனைவி சங்கரலட்சுமி (28). இவர் சம்பவத்தன்று குடும்ப தகராறு காரணமாக திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சின்ன கோவிலாங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், சங்கரலட்சுமியின் உடலை அவருடைய கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் மயானத்துக்கு கொண்டு சென்று எரித்தனர்.

3 பேர் மீது வழக்கு

இதுதொடர்பாக தெற்கு சங்கரன்கோவில் கிராம நிர்வாக அலுவலர் மல்லிகா சின்ன கோவிலாங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், சாஸ்தா, அவருடைய தந்தை மாடசாமி, உறவினர் ரமேஷ் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்