விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது;

Update: 2023-09-26 18:45 GMT

தேவகோட்டை

வேளாண்மைத்துறையில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் மூலம் பயிற்சிகள், கண்டுணர்வு சுற்றுலா, பண்ணைப்பள்ளி பயிற்சி, செயல்விளக்கங்கள் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் சிறு தானியம் மதிப்பு கூட்டல் தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகள் அறிந்து கொள்வதற்கு 4 வட்டாரங்களில் தேர்வு செய்யப்பட்ட 50 விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையம் மதுரை மற்றும் காரியாப்பட்டி சிறுதானியம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் விருதுநகர் மாவட்டத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. கேழ்வரகு, குதிரைவாலி, வரகு மற்றும் தினை போன்ற சிறுதானிய பயிர்களின் ரகங்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள் போன்ற விவரங்களை விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் வேளாண் விளை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செயல்முறை மற்றும் எந்திரங்களை காண்பித்து அதன் பங்கு எவ்வாறு உள்ளது என எடுத்துரைத்தனர். பயிற்சியில் பயனடைந்து சிறுதானியங்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய விவசாயிகளை ஊக்குவித்தனர். கண்டுணர்வு சுற்றுலாக்கு விவசாயிகளை கண்ணங்குடி வட்டார தொழில்நுட்ப மேலாளர் கிருஷ்ணசாமி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் சதீஸ்குமார் ஆகியோர் அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்