விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சிகள்
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.;
விருத்தாசலம்,
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் செப்டம்பர் மாதத்தில் விவசாயிகளுக்கு தொழில் நுட்ப பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை(திங்கட்கிழமை) குள்ளஞ்சாவடியில் தென்னை நார் கழிவு மேலாண்மை பயிற்சியும், 5-ந் தேதி சித்தூரில் சிறுதானியத்தில் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சியும், 7-ந் தேதி மணக்கொல்லை கிராமத்தில் சிறுதானியத்தில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சியும், 8-ந் தேதி கூடலையாத்தூர் கிராமத்தில் கரும்பு பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை குறித்த பயிற்சியும், 12-ந் தேதி சின்னகொமட்டி கிராமத்தில் களர்நில மேலாண்மை பயிற்சியும் நடக்கிறது.
14-ந் தேதி மணல்மேடு கிராமத்தில் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சியும், 15-ந் தேதி விருத்தாசலம் கே.வி.கே. மையத்தில் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சியும், 19-ந் தேதி திருமலை அகரத்தில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியும், 20-ந் தேதி விருதகிரிகுப்பத்தில் பலாப்பழத்தில் மதிப்பு கூட்டுதல் பயிற்சியும், 21-ந் தேதி விருத்தாசலம் கே.வி.கே. மையத்தில் திருந்திய நெல் சாகுபடி குறித்த பயிற்சியும், மணக்கொல்லை கிராமத்தில் காய்கறி பயிர்களில் இயற்கை இடுப்பொருட்கள் உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியும், 22-ந் தேதி அடரியில் பயறு வகை பயிர்களில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியும், கீழ்ச்செறுவாய் கிராமத்தில் 27-ந் தேதி மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை குறித்த பயிற்சியும், 29-ந் தேதி நந்தபாடி கிராமத்தில் சிறுதானிய பயிர்களில் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சியும் நடைபெற உள்ளது. இவ்வாறு அவரது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.