சென்னை: ஆன்லைனில் மெட்ரோ ரெயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல் - பயணிகள் அவதி

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆன்லைன் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-04-08 03:30 GMT

சென்னை,

சென்னையில் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பொதுப்போக்குவரத்தில் மெட்ரோ ரெயில் முக்கிய அங்கம் வகிக்கிறது. சென்னையின் பல்வேறு இடங்களை இணைக்கும் மெட்ரோ ரெயில் போக்குவரத்தில் வார நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் திங்கட்கிழமையான இன்று மெட்ரோ ரெயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

மெட்ரோ ரெயிலில் பயணிக்க பயணிகள் ரெயில் நிலையத்தில் உள்ள கவுன்ட்டர்களிலும் டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம். அதேவேளை ஆன்லைன் மூலமாகவும் மெட்ரோ ரெயில் டிக்கெட் எடுக்கலாம்.

இந்நிலையில், ஆன்லைன் மூலம் மெட்ரோ ரெயில் டிக்கெட் எடுப்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணிகள் ஆன்லைன் மூலம் மெட்ரோ ரெயில் டிக்கெட் எடுக்கமுடியவில்லை. இதனால், அலுவலகம் செல்வோர், பள்ளி கல்லூரி மாணவ-மாணவியர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பயணிகள் மெட்ரோ ரெயில் நிலைய கவுன்ட்டர்களுக்கு சென்று டிக்கெட் எடுத்துக்கொள்ளுமாறு மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. கோளாறு விரைவில் சரிசெய்யப்படும் என்றும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்த நிலையில் தற்போது கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ பயணிகள் வழக்கம்போல் ஆன்லைனில் டிக்கெட் எடுத்து வருகின்றனர்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்