ஆசிரியர்கள் சங்க கூட்டணி ஆர்ப்பாட்டம்

இளையான்குடியில் ஆசிரியர்கள் சங்க கூட்டணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2023-10-04 18:45 GMT

இளையான்குடி

இளையான்குடியில் தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்க கூட்டணி சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இளையான்குடி மேல்நிலைப்பள்ளி வளாகம் அருகே நடைபெற்றது. சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆதரவாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பாக இளையான்குடி ஒன்றிய தலைவர் இளமாறன் தலைமை தாங்கினார்.

செயலாளர் ஆல்பர்ட் அசோக்குமார் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். இடைநிலை ஆசிரியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்