ஆண்டிமடம்:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆண்டிமடம் கிளை சார்பாக பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை பி.எட் பயிற்சி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்து அவமதிப்பதை கண்டித்து கண்டன போராட்டம், ஆண்டிமடம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வட்டார தலைவர் மோகன் தாஸ் தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளரும், வட்டாரத் துணைத் தலைவருமான பவுலின் மேரி, மாவட்ட செயற்குழு வட்டாரத் துணைச் செயலாளர் ஜெயசீலி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் நளகீர்த்தி, ராமன், அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்டவர்கள்Teachers struggle பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னதாக வட்டாரத் துணைச் செயலாளர் செல்வகுமார் வரவேற்றுப் பேசினார். வட்டார செயலாளர், மாநில செயற்குழு உறுப்பினர் வேல்மணி போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் அசோகன் கோரிக்கையை விளக்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் ஜான்சன் நன்றி கூறினார்.