1, 161 ஆசிரியர்கள் - பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

திருவாரூர் மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிக்கு 1,161 ஆசிரியர்கள் - பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.;

Update: 2023-03-10 18:41 GMT

திருவாரூர்;

திருவாரூர் மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிக்கு 1,161 ஆசிரியர்கள் - பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீவெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொது தேர்வு

திருவாரூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13-ந் தேதி முதல் ஏப்ரல் 3 -ந் தேதி வரையிலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ந் தேதி முதல் ஏப்ரல் 20-ந் தேதி வரையிலும் நடக்கிறது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 6 ஆயிரத்து528 மாணவர்கள், 7 ஆயிரத்து502 மாணவிகளும், 11 -ம் வகுப்பு பொதுத்தேர்வை 5 ஆயிரத்து741 மாணவர்களும் மற்றும் 6 ஆயிரத்து986 மாணவிகளும், தலா 55 மையங்களில் எழுதுகின்றனர்.10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 7 ஆயிரத்து 943 மாணவர்கள் மற்றும் 7ஆயிரத்து 926 மாணவிகள் 69 தேர்வு மையங்களிலும் தேர்வு எழுத உள்ளனர். இதில் 12-ம் வகுப்பில் 116 மாற்றுத்திறனாளி மாணவர்களும், 11-ம் வகுப்பில் 83 மாற்றுத்திறனாளி மாணவர்களும், 10-ம் வகுப்பில் 170 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர்.

வினாத்தாள்கள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசின் வழிக்காட்டுதலின்படி சொல்வதை எழுதுபவர். ஏதேனும் ஒரு மொழிப்பாடம் எழுதுவதில் விலக்கு, கூடுதலாக ஒரு மணிநேரம் ஆகிய சலுகைகள் அரசுத் தேர்வுகள் இயக்குனரால் வழங்கப்பட்டுள்ளன. வினாத்தாள்கள், 6 கட்டுக்காப்பு மையங்களில் 24 மணிநேரமும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட உள்ளது.இத்தேர்வுப்பணிக்கு 1,161 ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வுகளை கண்காணிக்க கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையில் 5 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து தேர்வு மையங்களிலும் போலீசார் இணைந்து 80 நிலையான படை அமைக்கப்பட்டு தேர்வுகளில் எவ்வித முறைகேடும் நடைபெறாமல் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்