ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
அரியலூர் அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் வேலுமணி முன்னிலை வகித்தார். தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் நம்பிராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். பி.எட். படிக்கும் பயிற்சி மாணவர்களை ஆய்வுக்கு அனுமதிப்பதை கைவிட வேண்டும். ஆசிரியர்களுக்கு தேவையற்ற பணி சுமையை ஏற்படுத்தும் மாணவர்களின் கல்வி திறமையை முற்றிலும் பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை முழுவதுமாக கைவிட வேண்டும். பள்ளி மேலாண்மை குழுவை மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூட்ட வேண்டும். கல்விப் பணியை தவிர பிற பணிகளில், குறிப்பாக பதிவேற்றம் செய்யும் பணிகளில் இருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வற்புறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.