ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க கூட்டம்

வால்பாறையில் ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க கூட்டம் நடைபெற்றது.;

Update: 2023-07-12 00:45 GMT

வால்பாறையில் உள்ளாட்சித்துறை மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க வருடாந்திர மகா சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் ரஞ்சித் குமார் தலைமை தாங்கினார். மகா சபை கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 2021 மற்றும் 2022-ம் ஆண்டிற்கான பங்கு தொகை ரூ.10 லட்சத்து 45 ஆயிரம் அனைத்து உறுப்பினர்களுக்கும் லாபமாக பிரித்து வழங்கப்பட்டது.

மேலும் சங்க நலன்கள் கருதி துணை விதிகளில் திருத்தம் மேற்கொள்ள சங்க பொதுக்குழு ஒப்புதல் அளித்தது. முடிவில் சங்க துணை தலைவர் வேல்மயில் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்