போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது
காதலிக்க வற்புறுத்தி மாணவிக்கு தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.;
திண்டுக்கல் அருகே உள்ள செம்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 34). இவர், சின்னாளப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2 மாதங்களாக கண்ணன் வீட்டில் இருந்து வந்தார். இந்தநிலையில் கண்ணன், 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்தி அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனையடுத்து மாணவி தரப்பில், சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்துமேரி, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தார்.