போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது
சீர்காழி அருகே போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.;
சீர்காழி அருகே அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 53). இவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக உள்ளார். கோவிந்தராஜ் பணியாற்றும் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்துவரும் 9 வயது சிறுமிகள் 3 பேரிடம் அவர் பாலியல் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சிஅடைந்த சிறுமி ஒருவரின் தாய் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகவள்ளி, சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பலதா மற்றும் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 22-ந்தேதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர் கோவிந்தராஜை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் ஆசிரியர் கோவிந்தராஜை நேற்று கைது செய்த மகளிர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.