நாமக்கல்லில் வரி பாக்கி வைத்துள்ள நபர்களின் பெயர்கள் அடங்கிய பேனர்-நகராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டது
நாமக்கல்:
நாமக்கல் நகராட்சியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி உள்ளிட்ட இனங்களில் சுமார் ரூ.7 கோடி நிலுவை உள்ளது. இந்த தொகையை வசூலிக்க நகராட்சி அதிகாரிகள் குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் வரி பாக்கிகளை செலுத்துவதில் பொதுமக்கள் மந்தமாக இருந்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று அதிகளவு வரி பாக்கி வைத்துள்ள 24 பேரின் பெயர்களை பிளக்ஸ் பேனரில் அடித்து நகராட்சி அலுவலகம், மணிக்கூண்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பார்வைக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டது. இதனால் வரி பாக்கி வைத்துள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.