டாஸ்மாக் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்
டாஸ்மாக் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் காட்பாடியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அன்பரசன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவர் திருமூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் கோவிந்தராஜ் கலந்துகொண்டு விளக்க உரையாற்றினார்.
கூட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கேரளா மதுக்கடைகளை போல தமிழகத்திலும் மதுக்கடைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.