அண்ணனின் வீட்டை சூறையாடிய டாஸ்மாக் ஊழியர் கைது

கோட்டூர் அருகே சொத்து தகராறில் அண்ணனின் வீட்டை சூறையாடிய டாஸ்மாக் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-22 19:37 GMT

கோட்டூர்:

கோட்டூர் அருகே சொத்து தகராறில் அண்ணனின் வீட்டை சூறையாடிய டாஸ்மாக் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

சொத்து தகராறு

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கீழப்பனையூர் திருவாசல் பட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் இவருடைய மகன்கள் கண்ணதாசன் (வயது48). குணசேகரன் (46). மன்னார்குடியில் வசித்து வரும் கண்ணதாசன், நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

குணசேகரன் பெருகவாழ்ந்தான் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார் இருவருக்கும் பூர்வீகச் சொத்து பாகப்பிரிவினை செய்யப்பட்டது.

வீட்டை சூறையாடினார்

இதில் தனக்கு கூடுதலாக சொத்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று குணசேகரன் அடிக்கடி அண்ணன் கண்ணதாசனிடம் தகராறு செய்து வந்தார். இதனால் இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குணசேகரன், கண்ணதாசனுக்கு ஒதுக்கப்பட்ட கீழப்பனையூரில் உள்ள பூர்வீக வீட்டை அடித்து உடைத்துள்ளார். மேலும் வீட்டில் உள்ள அனைத்து பொருள்களையும் உடைத்து சூறையாடினார்.

கைது

இது குறித்து கண்ணதாசன் கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார்கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்