டாஸ்மாக் பாரில் திருடியவர் கைது

ஆம்பூர் டாஸ்மாக் பாரில் திருடியவர் கைது கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-05 17:45 GMT

ஆம்பூர் பைபாஸ் சாலையில் டாஸ்மாக் பார் இயங்கி வருகிறது. இந்த பாரில் கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.20,000 திருட்டு போனது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது ஒரு நபர் பணத்தை திருடி செல்வது தெரியவந்தது.

அந்த நபரை போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் மாலை சந்தேகத்தின் பேரில் ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் ஆம்பூரை அடுத்த பழைய சோலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அஜய் (வயது 21) என்பதும், டாஸ்மாக் பாரில் பணம் திருடியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்