தாராபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் கொரோனா காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 1090 மது பாட்டில்களை போலீசார் அழித்தனர்.
மதுபாட்டில்கள் பறிமுதல்
கொரோனா கால கட்டத்தித்தில் மது கடத்தலை தடுக்க போலீசார் ரோந்து பணியில் இருந்து வந்தனர். அப்போது திண்டுக்கலில் இருந்து அலங்கியம் வழியாக தாராபுரம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் மது பாட்டில்களை கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருப்பூர்-திண்டுக்கல் மாவட்ட எல்லையான தாசர்பட்டியில் சோதனை சாவடி அமைத்து அலங்கியம் போலீசார் வாகன சோதனை செய்தனர்.
அப்போது வாகனங்களில் மது பாட்டில்களை கடத்தி வந்தவர்களை கைது செய்தும், அந்த வாகனத்துடன் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் முடிவுற்ற நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 1090 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு முடியும் வரை பாதுகாத்து வந்தனர்.
அழிப்பு
உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் கைப்பற்றப்பட்ட 1090 மது பாட்டல்களைஅழிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று கலால் தாசில்தார் தலைமையில் தாராபுரம் கோட்ட கலால் அலுவலர் முருகதாஸ் முன்னிலையில் சப் -இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள காலி இடத்தில் ெபாக்லைன் மூலம் குழி தோண்டப்பட்டது.அதன்பிறகு 1090 மதுபாட்டில்களை குழியில் போட்டு உடைத்து அழித்தனர்.