திருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையை முன்னிட்டு திருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
திருச்சுழி,
தை அமாவாசையை முன்னிட்டு திருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
மோட்ச தீபம்
விருதுநகர் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள திருச்சுழி குண்டாற்றில் தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகாலை முதலே வந்தனர். பின்னர் அங்கு நீராடி இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
பின்னர் திருச்சுழி திருமேனிநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து கோவிலில் பக்தர்கள் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டனர். தை அமாவாசையை முன்னிட்டு திருச்சுழி திருமேனிநாத சுவாமி கோவில் மற்றும் குண்டாற்று பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாதசுவாமி கோவில், திருமுக்குளம் கரையில் தை மாத அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தர்ப்பணம் செய்தனர்.
மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.