வரத்து குறைவால் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு

வரத்து குறைவால் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்ந்துள்ளது.

Update: 2022-08-18 18:48 GMT

கரூர் மாவட்டம் குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், வடுகப்பட்டி, குந்தாணிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். மரவள்ளிக்கிழங்கு நன்றாக விளைந்ததும் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு மரவள்ளி கிழங்குகளை டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். மரவள்ளிக்கிழங்கை வாங்கி புதுச்சத்திரம், புதன் சந்தை, மலவேப்பங்கொட்டை மற்றும் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஜவ்வரிசி தயாரிக்கும் மில்களுக்கு அனுப்பி இருக்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்று ரூ.14 ஆயிரத்திற்கு கிழங்கு மில் அதிபர்கள் வாங்கிச் செல்கின்றனர். அதேபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக் கிழங்கு கடந்த வாரம் டன் ஒன்று ரூ.16 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்று ரூ.18 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்