தஞ்சை: வியாபாரியை திசை திருப்பி 7 கிலோ தங்கம் நூதன முறையில் திருட்டு
தஞ்சை அருகே வியாபாரியை திசை திருப்பி நூதன முறையில் 7 கிலோ தங்கத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது;
சென்னைய சேர்ந்தவர் மணி. இவர் சென்னையில் உள்ள மொத்த வியாபாரியிடம் இருந்து தங்க நகைகள் வாங்கி கொண்டு தஞ்சையில் உள்ள சில்லறை கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
அதேபோல் நேற்றும் சென்னையில் இருந்து நகைகள் வாங்கி கொண்டு தஞ்சையில் விற்பனை செய்வதற்காக சென்றுள்ளார்.அப்போது இரவு 8.15 மணி அளவில் சாப்பிடுவதற்காக தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.அங்கு சாப்பிட்டு விட்டு பில் கொடுப்பதற்காக கவுண்டரில் நகை வைத்திருந்த பையை தனது காலுக்கு அருகே வைத்துள்ளார்.
பணம் கொடுத்து விட்டு பையை தேடிய போது அதை யாரோ திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.வெளியே வந்து பார்த்தபோது ஒரே நிற ஆடையில் 9 பேர் செல்வதை கண்ட மணி அவர்களை துரத்தி பிடிக்க முயன்ற போது அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இது தொடர்பாக அவர் போலீசில் புகார் கொடுத்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது தொடர்பாக அங்குள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆராய்ந்து நகைகளை திருடி சென்றவர்களை தேடி வருகின்றனர்.