குடிமங்கலம் பண்ணைகிணர் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மைய கட்டிடத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கால்நடை பல்கலைக்கழகம்
குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயத்துடன் இணைந்த தொழிலாக கால்நடை வளர்ப்பு நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியின்போது குடிமங்கலம் ஒன்றியம் பண்ணைகிணர் ஊராட்சியில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
குடிமங்கலம் ஒன்றியம் பண்ணைகிணர் ஊராட்சியில் தற்போது சுமார் ரூ.260 கோடியில் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாடு கால்நடைபல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மைய கட்டிடங்கள் கட்டுமான பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது
பயன்பாட்டுக்கு எப்போது?
கால்நடை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் உடுமலையில் உள்ள தனியார் பள்ளியில் தற்காலிகமாக நடைபெற்று வருகிறது. பண்ணைகிணர் ஊராட்சியில் அனைத்து விதமான வசதிகளுடன் ஆய்வகங்களுடன் கட்டிடம் கட்டப்படுகிறது.
கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.