தமிழ்க்கூடல் திருவிழா

மயிலாடுதுறை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் திருவிழா நடந்தது.

Update: 2023-10-08 18:45 GMT

தமிழ்நாட்டில் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் ஆண்டுக்கு 3 முறை தமிழ்க்கூடல் திருவிழா நடத்திட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை வட்டாரத்தின் முதல் தமிழ்க்கூடல் திருவிழா அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். பட்டதாரி உதவி தலைமை ஆசிரியை லீலாவதி முன்னிலை வகித்தார். முதுகலை தமிழ் ஆசிரியை லட்சுமி வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்கனியன் "தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்' என்ற தலைப்பில் இலக்கிய உரையாற்றினார். மாணவிகள் சார்பில் தமிழின் பெருமை குறித்து சிறப்பாக பேசிய 12-ம் வகுப்பு மாணவி கிருபாவுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. மேலும், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. முடிவில் தமிழாசிரியர் சுந்தரி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்