தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-26 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் வீரபெருமாள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் பீமாராவ், செய்தி தொடர்பாளர் கனியமுதன், இளம்புலிகள் அணி மாவட்ட செயலாளர் தமிழரசு, நகர செயலாளர் காளிராஜ், எட்டயபுரம் நகர செயலாளர் பாலு, விளாத்திகுளம் தொகுதி செயலாளர் கணேசன், சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் மாணிக்கராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், இந்து மக்களை சூத்திரன் என்றும், பெண்களை ஒழுக்கமற்றவர்கள் என்றும் இழிவு செய்யும் மனுநீதி எனும் மனுதர்ம சாஸ்திரம் நூலை தமிழக அரசு நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்