தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க கூட்டம்
கொரடாச்சேரியில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க கூட்டம் நடந்தது.
கொரடாச்சேரி:
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க கொரடாச்சேரி ஒன்றிய கூட்டம் மணக்காலில் நடந்தது. கூட்டத்திற்கு கதிர்வேல் தலைமை தாங்கினார். விவசாயத் தொழிலாளர் சங்க கொடியை மாவட்ட துணைச் செயலாளர் ராஜா ஏற்றிவைத்தார். இதில் விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஜோசப், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.கேசவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வரவேற்பு குழு செயலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.