மதுரையில் கட்டப்பட்ட நூலகத்திற்கு தமிழறிஞர்கள் பெயரை வைத்திருக்கலாம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

மக்கள் வரிப்பணத்தை வீணாக்கும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது என முன்னாள் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.;

Update: 2023-07-16 08:13 GMT

சென்னை,

அதிமுக நிர்வாகிகளுடன் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் மதுரை மாநாட்டிற்கான ஏற்பாடுகள், அங்கு நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது.

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மதுரை எழுச்சி மாநாடு குறித்து மூத்த நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

மக்கள் வரிப்பணத்தை வீணாக்கும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது. தமிழகத்தின் அத்தியாவசியப் பணிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்புக்கான பணிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை. எங்கு பார்த்தாலும் கருணாநிதியின் புகழை திமுக அரசு பாடுகிறது.

மதுரை நூலகத்திற்கு திருவள்ளூர் பெயர் வைத்து இருக்கலாம் அல்லது தமிழ் அறிஞர்கள் பெயர் வைத்து இருக்கலாம். பேனா சிலையை சொந்த செலவில் அறிவாலயத்தில் வைக்கலாம். அதிமுக சார்பில் பேனா சின்னம் அமைப்பதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம்

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்