தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பழனியில், தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2022-06-06 17:07 GMT

தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில், பழனி வேல் ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில பொதுச்செயலாளர் வதிலை செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கார்த்தி, மாவட்ட பொறுப்பாளர்கள் ஆனந்த், ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, பழனி முருகன் கோவில் போகர் சன்னதியில் உள்ள மரகத லிங்கத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், பழனி ரோப்கார் பயண கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், கோவில் நிர்வாகத்துக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்தில் அதிகாரியை நியமிக்க வேண்டும், தற்போதைய இணை ஆணையரை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்